Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் PUBG-யா….? தயவு செய்து வேண்டாம்….. சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை….!!

Pubgக்கான தடை இந்தியாவில் நீக்கப்பட்டால் அது சிறுவர்களுக்கு மிகவும் ஆபத்தானது என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

சமீபத்தில் மத்திய அரசு பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதில், பப்ஜி கேமை  இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் விளையாடி வந்துள்ளனர். இந்த கேம் தடையால் அவர்கள் அனைவரும் தற்போது மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். ஆனால் சீன நிறுவனத்திடமிருந்து தனது அங்கீகாரத்தை திரும்பப் பெற்ற Pubg யின் ஒரிஜினல் நிறுவனமான தென் கொரியா நிறுவனம் அதனை மீண்டும் இந்தியாவில் நிறுவ உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. இதன்படி, மீண்டும் இந்தியாவிற்கு Pubg வந்தால் அது சிறுவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்துதான் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில், பப்ஜி கேம் தடைக்கு முன்பாக சிறுவர்கள் பலர் அந்த கேம் விளையாடுவதற்காக தங்களது நேரத்தையும், பெற்றோர்களின் பணத்தையும் அலட்சிய மனநிலையோடு வீணாக செலவு செய்து வந்தனர். 

பணத்தின் அருமை அறியாமல், ஒரு கேமிற்காக  பெற்றோர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த லட்ச கணக்கிலான பணத்தை ஒரு நொடியில் செலவு செய்து விடுகிறார்கள். இது ஒருபுறமிருக்க, பல சிறுவர்கள் தொடர்ந்து இந்த விளையாட்டிற்கு அடிமையாகி நாள் முழுவதும் இந்த விளையாட்டை விளையாடுவதையே வேலையாக வைத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

ஒருவேளை பப்ஜி கேம் மீண்டும் இந்தியாவிற்கு வர நேரிடுமானால், குறைந்தபட்சம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விளையாடும் அளவிற்கு பாதுகாப்பு அம்ஸங்களை அப்டேட்களாக  கொண்டு வருவது நல்லது. மீண்டும் சிறுவர்களை இதற்குள் நுழைய விட்டு விளையாட வைப்பது, மிகவும் ஆபத்தான ஒன்று என எச்சரித்து வருகின்றனர். 

Categories

Tech |