Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மூன்று சதவீத நிறுவனங்கள் மட்டுமே புதிதாக ஆட்களை பணியமர்த்தும்…!!

அடுத்த மூன்று மாத கால கட்டத்தில் வெறும் 3 சதவீத நிறுவனங்கள் மட்டுமே புதிதாக ஆட்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள 813 நிறுவனங்களில் ஆட்கள் சேர்ப்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் நடப்பாண்டின் இறுதி காலாண்டில் வெறும் 3 சதவீத நிறுவனங்கள் மட்டுமே மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் ஆட்களை பணியமர்த்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத நிலையாகும். அதேசமயம் 7 சதவீத நிறுவனங்களில் ஊதிய உயர்வு காண வாய்ப்பு இருக்கும் நிலையில், 3 சதவீத நிறுவனங்களில் அது குறைய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 54 சதவீத நிறுவனங்களில் ஊதிய விஷயத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த ஆய்வின் முக்கிய அம்சமாக பெரிய நிறுவனங்களை காட்டிலும் சிறிய நிறுவனங்கலே ஆட்களை புதிதாக பணிக்கு எடுப்பதில் அக்கறை காட்டுவதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |