Categories
தேசிய செய்திகள்

நடிகை கங்கனாவுக்கு கருப்புக் கொடி காட்டிய சிவசேனா கட்சியினர்…!!

மகாராஷ்டிர அரசு உடனான மோதல் வலுத்துள்ள நிலையில் நடிகை கங்கனா ரனாவத் மத்திய அரசின் பலத்த பாதுகாப்புடன் மும்பை திரும்பினார்.

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துக்கு பாலிவுட்டின் வாரிசு நடிகர்களின் அழுத்தமே காரணம் என்றும் சுஷாந்த் மரண வழக்கில் குற்றவாளிகளை மும்பை போலீசார் பாதுகாப்பதாகவும் நடிகை கங்கனா ரனாவத் குற்றம்சாட்டினார். மும்பையில் இருப்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருப்பதைப்போல் உள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால் கங்கனா ரனாவத்துக்கு மும்பையில்லோ அல்லது மகாராஷ்டிராவிலோ வாழ உரிமை இல்லை என சிவசேனா மூத்த தலைவர் திரு சஞ்சய் ராவத் அறிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த கங்கனா தனது சொந்த ஊரான மணாலியில் இருந்து மும்பை திரும்புவதாகவும் முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்றும் சவால் விடுத்தார். இந்த சூழலில் மும்பை செல்லும் கங்கனா ரணாவத்துக்கு  அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு y பிளஸ் பாதுகாப்பு வழங்கியது.

இதனைத் தொடர்ந்து கங்கனா ரனாவத் நேற்றுமுந்தினம் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சொந்த ஊரான மணாலியில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் மொஹாலி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றார். Y பிளஸ் பிரிவில் உள்ள கமாண்டோ வீரர்கள், படைவீரர்கள் சூழ்ந்தபடி கங்கனாவை விமான நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கங்கனாவிற்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினரும் ஆதரவு தெரிவித்து கர்மி  சேனா அமைப்பினரும் மும்பை விமான நிலையத்தில் குழுமியிருந்தனர். இதனைத் தொடர்ந்து மும்பை வந்த கங்கனா பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.

Categories

Tech |