அழகு சாதன பொருள்களின் விளம்பர படத்தில் நடிக்கமாட்டேன் என்று நடிகை சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.
பிரேமம் படத்தில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழில் கரு, மாரி 2 என இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். சாய்பல்லவி தற்போது சூர்யாவுடன் நடித்த என்ஜிகே திரைப்படம் மே 31-ந் தேதி திரைக்கு வரயிருக்கிறது.
இந்நிலையில் தற்போது சாய் பல்லவிக்கு அழகு சாதனப்பொருள் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதற்கு அந்த நிறுவனம் நடிகை சாய்பல்லவிக்கு சம்பளமாக ரூ.2 கோடி தருவதாக கூறியது. அதற்கு சாய்பல்லவி நான் அழகு சாதன பொருள்களின் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்.
ஏனென்றால் நான் இயற்கை அழகை விரும்புகிறேன் என்றும், அழகு சாதன பொருள்களின் விளம்பர படத்தில் நடிக்க கூடாது என்பதை கொள்ளகையாக வைத்துள்ளேன் என்றும் கூறியுள்ள சாய்பல்லவி மேக்கப் போட்டால் மட்டும் ஒருவர் அழகாக மாறமுடியுமா என்று கூறியுள்ளார்.