Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குப்பைகளை கொட்ட வெட்டப்பட்ட குழி…. “நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான சிறுவர்கள்”… சோகத்தில் கிராமம்..!!

திருமயம் அருகே குப்பைகளை கொட்டுவதற்காக வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில், தேங்கி இருந்த நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இருக்கும் சந்தன விடுதி பகுதியில் வசித்து வருபவர்  கருப்பையா என்பவரின் மகன் அன்புச்செல்வன்.. 8 வயதுடைய இவர் 3 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று விட்டார்.. இந்த சிறுவனும், 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சிங்கப்பூர் கருப்பையா என்பவரின் மகன் விமல்ராஜ் (10) ஆகிய இரண்டு பேரும் தற்போது கொரோனா ஊரடங்கால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளனர்.

இவர்களின் வீட்டின் அருகே வசித்து வரும் விவசாயி பழனியப்பன் என்பவர் தனது நிலத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஒரு பெரிய குப்பைக்குழி ஒன்றை தோண்டியிருந்தார்.. அதில் நேற்று பெய்த மழையின் காரணமாக நீர் நிரம்பி இருந்துள்ளது.

இதனை அறியாமல் அங்கு விளையாடிக்கொண்டிருந்த அன்புச்செல்வன் மற்றும் விமல்ராஜ் ஆகிய இருவரும் கால்களை கழுவுவதற்காக குழிக்குள் இறங்கியிருக்கின்றனர்.. ஆழம் தெரியாமல் பள் ளத்துக்குள் இறங்கிய இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன், வட்டாட்சியர் ரத்தினாவதி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திருமயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர்கள் இருவர் பள்ளத்துக்குள் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

Categories

Tech |