Categories
உலக செய்திகள்

செல்போனைப் பார்த்துக்கொண்டே… பாத்ரூமில் உட்கார்ந்த இளைஞர்… பின் அலறியபடியே அம்மாவை அழைத்தார்… நடந்த சம்பவம் இதுதான்..!!

பாத்ரூமில் செல்போனைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்த இளைஞர் ஒருவரை மலைப் பாம்பு அந்த இடத்தில் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

தாய்லாந்தில் ஒரு பகுதியில் வாழ்ந்து வரும் 18 வயதான சிராபாப் மசுகரத் (Siraphop Masukarat) என்ற இளைஞர் செல்போனை பார்த்துக்கொன்டே பாத்ரூமுக்கு சென்று உட்கார்ந்துள்ளார்.. பின் சில நிமிடத்தில் வலி தாங்காமல் கீழே குனிந்து பார்த்துள்ளார்.. அப்போது மலைப்பாம்பு ஒன்று அவரது அந்த உறுப்பைக் கவ்விகொண்டு இருந்துள்ளது.

உடனே அய்யோ அம்மா என்னை காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டு அலறியுள்ளார் அந்த இளைஞர்.. சத்தம் கேட்டு அவரின் தாயார் ஓடி வர, கழிவறை முழுவதும் ஒரே இரத்தமாக இருந்துள்ளது… அதனைத்தொடர்ந்து மகனை ஒன்னும் இல்லடா பயப்படாதே என ஆசுவாசப்படுத்திவிட்டு, மருத்துவ உதவிக்குழுவை அழைத்துள்ளார் அவரின் தாய்.

அவர்கள் வந்து அந்த இளைஞருக்கு முதலுதவி அளித்த பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.. இதற்கிடையே அவரின் தாய் பாம்பு பிடிப்பவர்களை அழைக்க, அவர்கள் வந்து பாம்பைத் தேடிப் பார்க்க, அது கழிவறை கோப்பைக்குள்ளேயே சுருண்டு கொண்டு இருந்துள்ளது.

அதனை லாவகமாக பிடித்த அவர்கள், பின் அது ஒரு விஷ தன்மையற்ற மலைப்பாம்பு என்று சொன்னார்கள்.. அதனால்தான் இளைஞர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்..!

 

Categories

Tech |