Categories
தேசிய செய்திகள்

காதல் விவகாரம் : தலித் என்பதால் வெறுப்பு….. இளைஞரை அடித்தே கொலை செய்த பெண் வீட்டார்…..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் காதல் விவகாரத்தால் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திரப்பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தையடுத்த  ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர் மனிஷ் ராம்.  இவர் அதே பகுதியில் உள்ள பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மனிஷ் ராம் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், பெண்ணின் குடும்பத்தினர் இவர்களது காதலை எதிர்த்தனர். பின் மனிஷ் ராம்க்கு  பெண்ணின் குடும்பத்தினரால் ஆபத்து இருப்பதை உணர்ந்த அவரது பெற்றோர்கள், அவரை மும்பைக்கு அனுப்பி சிலகாலம் ஊருக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தினர். அதன்படி,

மும்பைக்கு சென்ற மனிஷ் ராம் மீண்டும் கொரோனா பாதிப்பை  காரணமாக வைத்து தனது சொந்த கிராமத்திற்கு சென்று உள்ளார். அங்கு சென்ற அவர், மீண்டும் அந்த பெண்ணை காதலிக்க நினைத்து அடிக்கடி சந்திக்கவும் முயற்சித்துள்ளார். இதை அறிந்த பெண்ணின் வீட்டார், அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தனர். இந்நிலையில்  வழக்கம் போல் காதலியை மனிஷ் ராம் காணச் செல்லும் வழியில், அவரை வழிமறித்த பெண்ணின் வீட்டார்கள், கட்டிவைத்து தாறுமாறாக அடித்து சித்திரவதை செய்துள்ளனர்.

பின் இது குறித்து அறிந்த மனிஷ் ராமின்  பெற்றோர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்தனர். அதிகாரிகள் வருவதைக் கண்டதும், பெண்வீட்டார் மனிஷ் ராமை  அங்கேயே அப்படியே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். பின் அவரை மீட்ட அதிகாரிகள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கே மனிஷ் ராமை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பெண் வீட்டாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து தகவல் அறிந்த தேசிய மனித உரிமைகள் ஆணையமும் மனிஷ் ராம் மரணம் குறித்து உத்தரபிரதேச அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Categories

Tech |