கனடாவில் ஆசையாக வளர்த்த பாம்பு பிடிக்காமல் தப்பிச்சென்று பின் இறந்து போன சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கனடா நாட்டில் ஒருவர் செல்லப்பிராணியாக மலைப்பாம்பு ஒன்றை ஆசையாக வளர்த்து வந்துள்ளார்.. இந்நிலையில் அதனை வீட்டில் அடைத்து வைத்து வளர்ப்பது அந்த பாம்புக்கு பிடிக்கவில்லையோ என்னவோ,தெரியவில்லை அதன் உரிமையாளர் தூங்கிய சமயம் பார்த்து நைசாக தப்பிச்சென்று விட்டது..
ஆம், ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி காணாமல் போன அந்த பாம்பு விக்டோரியாவில் கார் ஒன்றுக்கு கீழே இருப்பதாக தகவல் தெரியவரவே, அதனை அதன் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.. அவர் அதனை தனது முதுகுப்பையில் வைத்திருக்கின்றார்.
ஆனால், அந்த பாம்புக்கு வீட்டிலிருப்பது பிடிக்கவில்லையோ என்னவோ.. ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி, உரிமையாளர் தூங்கிய போது மீண்டும் வீட்டை விட்டு வெளியே சுதந்திரத்தை நோக்கி பயணத்தை தொடங்கியுள்ளது அந்த பாம்பு.
அதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அந்த பாம்பு ஒரு வீட்டினுடைய புல்வெளியில் கண்டெடுக்கப்பட்டது.. ஆனால், இந்த முறை அது உயிருடன் இல்லை… 1.5 மீட்டர் நீளமுள்ள அந்த மலைப்பாம்பின் உடலைப் பார்த்து, அது தன்னுடைய பாம்புதான் என உரிமையாளர் உறுதி செய்தார்.. அந்த பாம்பு வீட்டை விட்டு மட்டுமல்ல உலகை விட்டே பிரிந்து விட்டது..