Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திருமணமாகல… அதனால குழந்தைய எரிச்சு கொன்னுட்டோம்… அதிர வைத்த தாய் தந்தை..!!

திருமணமாகாத நிலையில் பிறந்த குழந்தையை தாய், தந்தை எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நேற்று முன்தினம் அதிகாலை எரிந்த நிலையில், பிறந்து 4 நாள்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கருகி சடலமாக கிடந்துள்ளது.. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கூறியுள்ளனர்..

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த கோமதி என்ற பெண்ணுக்கும், கண்டியபேரியைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கத்தின் காரணமாக இருவருக்கும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதனால் கோமதி கர்ப்பமாகியுள்ளார்..

இதையடுத்து கல்யாணம் ஆகாத நிலையில் குழந்தை பிறந்ததன் காரணமாக சங்கரின் தூண்டுதலின் படி பெற்ற தாயே இரக்கமின்றி எரித்து கொலை செய்துள்ளார். இது அனைத்தும் விசாரணையில் தெரிந்தது..

பின்னர் கோமதியை கைது செய்த போலீசார் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த சங்கரை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் சங்கரை, நகர போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |