மதுரை மாவட்டம் திருமங்கலம், திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலான கடந்த சில நாட்களாக மழைபெய்து வருகிறது.. இந்தநிலையில் திருப்பரங்குன்றம் மலையின் மேல் அமர்ந்திருந்த இளைஞர்கள் சிலர் குடித்துவிட்டு மதுபோதையில் உயரமான மலையிலிருந்து விபரீதமாக சறுக்கி விளையாடியதோடு மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக அபாயகரமான விளையாட்டுகளில் ஈடுபட்டனர்..
மழை பெய்யும்போது மலைக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இளைஞர்கள் சிலர் மதுகுடித்து விட்டு போதையில் செய்த செயல் அந்தப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மலையில் குத்தாட்டம் போட்ட இளைஞர்களின் விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.