Categories
தேசிய செய்திகள்

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் ஆணை…!!

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது. இதில் அப்போதைய தொலைத் தொடர்பு துறை அமைச்சரான திமுகவை சேர்ந்த திரு ஆ. ராசா, திருமதி கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் திரு ஆ ராசா, திருமதி கனிமொழி உள்ளிட்டோர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்ந்து விசாரணை முடிவில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பாட்டியாலா நீதிமன்றத்தில் இந்த தீர்ப்புக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன. இந்த மனுக்களை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் முறையிட்டனர்.

இந்நிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்த டெல்லி உயர்நீதிமன்றம் எதிர் மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டது.

Categories

Tech |