மகரம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக செல்வதன்மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும்.
உற்றார் உறவினர்களின் ஆதரவு திருப்திகரமாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் தேவையற்ற விரயங்களை சந்திக்க நேரலாம். ஒருசிலருக்கு வீடு மனை போன்றவற்றை வாங்கும் முயற்சிகள் சாதகமான பலன்களைக் கொடுக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மனசங்கடங்கள் நேரலாம். ஒருவரையொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: கருநீல நிறம்.