Categories
மாநில செய்திகள்

வருகிறது “கூடுதல் ரயில்கள்”… எத்தனை தெரியுமா…? … ரயில்வே துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில், மேலும் 80 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவெடுத்துள்ளது.

தமிழ்நாட்டில், ஏற்கனவே பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது இதுகுறித்து ரயில்வே துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, சென்னை சென்ட்ரல் – டெல்லி, சென்னை சென்ட்ரல் – சாப்ரா என்ற  இருமார்க்கத்திலும் இன்று முதல் ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

மேலும் வரும் 15ஆம் தேதி முதல் திருச்சி-ஹவுரா இடையிலான சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு சென்ற 10ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் தங்களின் நாட்டிற்கு திரும்பிவருவதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாகவும், மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கூடுதல் ரயில்களை இயக்க தயார் எனவும் ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |