தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,200ஐ தாண்டியது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று 5 ஆயிரத்து 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்து 571 ஆக உயர்ந்துவிட்டது. நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 77 பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,231 ஆக அதிகரித்துவிட்டது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 987 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 593 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 6 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்தனர்.
தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 35 ஆயிரத்து 422 பேர் குணம் அடைந்தனர். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 394 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 298 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 297 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 296 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 289 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.