மழைக்கால கூட்டத்தொடரில் 23 மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு தண்டனை விதிக்கும் மசோதா, எம்பிக்களின் ஊதியத்தை ஒரு வருடத்திற்கு 30% குறைப்பதற்கான மசோதா, விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விரும்பிய இடத்தில் விருப்பமான விலைக்கு விற்பதற்கு வகை செய்யும் மசோதா போன்ற திட்டங்கள் குறித்து, நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி தொடங்கி அக்டோபர் 1ம் தேதி வரை 18 நாட்கள் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் 11 மசோதாக்கள், ஏற்கனவே நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டங்களுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
நடப்பு நிதியாண்டிற்கான துணை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்பட்டு, வாக்கெடுப்பிற்கு விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாகயர் ஓம் பிர்லா,” கொரோனா பரவலை தடுக்க எம்.பி.க்கள் வருகையை மின்னணு முறையில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என அவர் கூறினார். மேலும் நாடாளுமன்றம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, கூட்டத்தொடருக்கு தொடங்குவதற்கு முன்பு, எம்.பி.க்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.