Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நாட்டு மாடு வளர்ப்பில் ஆர்வம் காட்டும் எம்.பி.ஏ. பட்டதாரி…!!

விருதுநகரைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் நாட்டு மாடுகள் வளர்த்து அவற்றின் மூலம் கிடைக்கும் சாணம் மற்றும் கோமியத்தில் இருந்து  சோப்பு, பற்பசை உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வருமானம் ஈட்டி வருகிறார்.

விருதுநகரில் வசித்துவரும் எம்.பி.ஏ. பட்டதாரி சங்கர். தனியார் நிறுவனங்களில் பத்து ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த இவர், மனநிறைவு கிடைக்காததால் பணியில் இருந்து விலகி நாட்டு மாடுகளை வளர்க்க ஆரம்பித்தார். நாட்டு மாட்டில் இருந்து கிடைக்கும் பஞ்சகவ்யத்தை கொண்ட என்னென்ன மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்கின்றனர், எப்படி தயார் செய்கின்றனர், என்பதையும் அறிந்து கொண்ட சங்கர் நாக்பூரில் உள்ள பயிற்சி மையத்தின் மூலம் பயிற்சி பெறவும் ஆரம்பித்தார்.

அதன் பின்னர் பஞ்சகவ்யத்தில் இருந்து சோப்பு, பற்பசை, தைலம், பினாயில் உள்ளிட்டவற்றை தயாரித்த இயற்கை அங்காடிகள் மற்றும் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட ஊர்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த பொருட்கள் உடலுக்கோ,  சுற்றுச்சூழலுக்கோ எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறும் இந்த பட்டதாரி இளைஞர், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் தயாரிப்பு குறித்து பலருக்கும் பயிற்சி வழங்கி வருகிறார்.

மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் சாதிக்க துடிக்கும் இளைஞர்கள் மத்தியில், நாட்டு மாடு வளர்ப்பில் ஆர்வம் காட்டி அதன் மூலம் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு மதிப்புக் கூட்டுப் பொருட்களை உற்பத்தி செய்த தொழில் முனைவோராக சாதித்துவரும் பட்டதாரி இளைஞர் சங்கரின் முயற்சி பாராட்டுக்குரியது.

Categories

Tech |