Categories
தேசிய செய்திகள்

“அமைச்சர் பதவி விலக வேண்டும்”… போராட்டத்தில் குதித்த பாஜக… போலீஸ் தடியடி…!!

அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று தலைமை செயலகத்தின் முன்பு போராட்டம் நடைப்பெற்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் அமைச்சரை பதவி விலக கூறி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்த்து. அதாவது, மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி. ஜலீலுக்கு தங்கக் கடத்தல் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகவும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், பாஜக மற்றும் இளைஞர் காங்கிரசார் அணியினர் தலைமைச் செயலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் கூறிய அறிவுறுத்தலையும் மீறி, போடப்பட்டிருந்த தடுப்புகளை தகர்த்து போராட்டக்காரர்கள் தலைமைச் செயலகத்தில் நுழைய முயன்றனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாததால் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். அப்போது  போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இருவருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால், போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரகளை அங்கிருந்து கலைத்தனர்.

Categories

Tech |