Categories
தேசிய செய்திகள்

“போதைப்பொருள் கடத்தல் விவகாரம்”… மும்பை, கோவாவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை…!!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கோவா மற்றும் மும்பையின் பல இடங்களில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிய திருப்புமுனைகள் ஏற்பட்டு வந்த நிலையில் உள்ளன. இந்த தற்கொலை வழக்கை விசாரிக்ககையில் பலரின் கூட்டு முயற்சிகள், போதைப்பொருள் கடத்தல் போன்ற தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, சுஷாந்த் மரண விவகாரத்தை ஒட்டி எழுந்த போதை பொருள் புகார் தொடர்பாக மும்பை மற்றும் கோவாவில் 7 இடங்களில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே இந்த வழக்கில் சுஷாந் சிங்கின் காதலி ரியா உட்பட பல பிரபலங்களுக்கு போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்பு உள்ளதாகவும், அவர்களுள் முன்னணி நட்சத்திரங்கள் 25 பேரின் பட்டியலை தயார் செய்து வைத்துள்ள என்.சி.பி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக என்.சி.பி மும்பை அலுவலகத்தில் உயர் மட்ட கூட்டமும் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |