புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை அமேசான் நிறுவனர் பெற்றுள்ளார்.
உலகின் முக்கிய பெரும் பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி பிடித்திருந்த இடம் தற்பொழுது தள்ளிப் போய்விட்டது. அதாவது அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் முதலிடத்தை பெற்றுள்ளார். இது குறித்து, புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் முதலிடத்திலும், இந்தியாவின் முகேஷ் அம்பானி ஐந்தாமிடத்திலும் உள்ளனர்.
அதாவது, முதலிடத்தில் உள்ள அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் சொத்து மதிப்பு 13 லட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாயாகவும், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 8 லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இரண்டாமிடத்திலும் உள்ளார்.மேலும், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பர்க் 7 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 3ஆம் இடத்திலும், ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலோன் மஸ்க் 6 லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 4ஆம் இடத்திலும் உள்ளனர். இந்தப் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 6 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உள்ளார்.