துலாம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு உற்சாகம் தரக்கூடிய இனிய நாளாக அமைய இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலைத்து இருக்கும். சகோதர சகோதரிகளின் மூலம் ஆதாயம் காண்பீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துக் கொள்வீர்கள். ஒருசிலருக்கு பூமி தொடர்பான விஷயங்களில் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு. இதனால் கவனமாக இருங்கள். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நவக்கிரகங்களை வழிபட்டு வர நன்மைகள் நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.