விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு ஆன்மீக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும்.
இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. சுயதொழில் புரிபவர்களுக்கு நல்ல லாபகரமான பலன்கள் கிடைக்கக்கூடிய அமைப்புள்ளது. கணவன்-மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குருபகவான் வழிபாடு செய்துவர சுபகாரியங்கள் கைகூடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.