மகரம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதை மனதிடத்தோடு எதிர்கொள்ளும் தைரியம் பிரக்கும்.
வருவது வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்கின்ற மனநிலையில் இருப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஓரளவு நீங்கும். சுமூகமான சூழ்நிலையில் இருவரும் மனம்விட்டு பேசுவதும் ஒற்றுமைக்கு வழிவகுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் துர்க்கை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.