நாளை நீட் தேர்வு நடக்க இருக்கும் நிலையில் மாணவர்கள் நீட் அச்சத்தால் மரணம் அடைந்து வருகின்றனர். தற்போது வரை அடுத்தடுத்து 3 மாணவர்கள் மரணம் அடைந்துள்ள நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இன்னொரு நீட் மரணம். நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த தருமபுரி ஆதித்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அடிமை அதிமுக-பாசிச பாஜக சேர்ந்து செய்த கொலை. மாணவர்களே சற்றே பொறுமையாக இருங்கள். 8 மாதங்களில் தலைவர் @mkstalin அவர்களின் ஆட்சியில் உங்கள் கனவு மெய்ப்படும் #BanNEET_SaveTNStudents என்று பதிவிட்டுள்ளார்.
இன்னொரு நீட் மரணம். நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த தருமபுரி ஆதித்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அடிமை அதிமுக-பாசிச பாஜக சேர்ந்து செய்த கொலை. மாணவர்களே சற்றே பொறுமையாக இருங்கள். 8 மாதங்களில் தலைவர் @mkstalin அவர்களின் ஆட்சியில் உங்கள் கனவு மெய்ப்படும் #BanNEET_SaveTNStudents
— Udhay (@Udhaystalin) September 12, 2020