வங்கி மேலதிகாரி போன்று மக்களிடம் பேசி பணத்தை சுருட்டிய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாட்டில் இந்த கொடிய கொரோனா காலகட்டத்திலும் பணமோசடி தங்க கடத்தல் போதைப் பொருள் கடத்தல், ஆள் மாறாட்டம், போன்ற குற்றச்சாட்டுகள் நடந்தவண்ணம் உள்ளது. அந்த வகையில், வங்கி அதிகாரி போல தொலைபேசியில் பேசி வாடிக்கையாளரின் விவரங்களைப் பெற்று அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைச் சுருட்டும் சர்வதேச கும்பலைச் சேர்ந்த 6 பேரை மும்பை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் தரப்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில் 6 நபர்களிடமிருந்து லேப்டாப்கள், சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட டேட்டா பேஸ்கள், ஸ்மார்ட் போன்கள் போன்றவற்றை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மலாத் பகுதியில் அவர்களின் தொலைபேசி உரையாடலைக் கேட்ட உளவுத்துறையினர் கொடுத்துள்ள தகவலின் அடிப்படையில் இந்த 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் சென்ற 11ம் தேதி சந்தேகப் படக்கூடிய இரு இடங்களில் போலீசார் அதிரடி சோதனைகளையும் நடத்தினர்.