Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 பேருக்கு அரிவாள் வெட்டு – சிறுவன் உட்பட 2 பேர் கைது..!!

சென்னை விருகம்பாக்கத்தில் சிறுவன் உட்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருகம்பாக்கத்தில் சேர்ந்த கஜேந்திரன் என்பவரின் மகன் தியாகு. பள்ளி மாணவரான இவர், வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து செல்போன் பார்த்துக்கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத ஆட்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். 2018 ஆம் ஆண்டு ரவுடி புறா மணி கொல்லப்பட்ட வழக்கில் சரத் என்பவரை பழிதீர்க்க அவரது சகோதரர் மற்றும் கூட்டாளிகள் திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது. கொலைச்செய்ய தேடிச்சென்ற சரத் வீட்டில் இல்லாததால், அவரது சித்தி மகனான தியாகுவை அரிவாளால் வெட்டியதும் தெரியவந்தது. இந்த நிலையில் புறா மணியின் 17 வயது சகோதரன் மற்றும் கூட்டாளிகளான சிவசங்கர் மற்றும் சிவராமன் ஆகியோர் வலசர்வாக்கத்தில் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். அவர்களை கைது செய்து விசாரித்தபோது, தியாகுவை வெட்டிவிட்டு தப்பி ஓடிய கையோடு அம்பேத்கர் நகரில் தீபிகா என்பவரை கத்திமுனையில் மிரட்டி செயின் பறித்ததும் தெரியவந்தது. நகை பறிப்பதை தடுக்க முயன்ற கண்ணன் என்பவரையும் இந்த கொலைகாரக் கும்பல் கத்தியால் குத்தியுள்ளது. இதையடுத்து ரவுடி புறாமணியின் 17 வயது சகோதர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், கூட்டாளிகள் சிவராமன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Categories

Tech |