இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்கள் முற்றிலும் களை எடுக்கப்பட வேண்டுமென ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தாலிபானுக்கும் ஆப்கன் அரசுக்கும் ஏற்கனவே நடைபெற்ற ஏகப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு சமாதானப் பேச்சுவார்த்தை கத்தாரில் உள்ள தோஹா நகரில் நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்வில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, இந்த சமாதான பேச்சுவார்த்தை ஒரு வரலாற்று நிகழ்வு எனத் தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்வில் காணொலி மூலமாக டெல்லியில் இருந்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது, உள்நாட்டுப் போரால் உருக்குலைந்து போன ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப வர வேண்டும் என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத இயக்கங்கள் ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து முற்றிலுமாக களையெடுக்கப்பட வேண்டும் என்றும் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.