பீகாரைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷி பிரசாத் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் ரகுவன்ஷி பிரசாத் சில நாட்களில் குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால் அதன் பின் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த பிரசாந்த் சிங், லல்லு பிரசாத்தின் ஆர்ஜேடி கட்சியை சேர்ந்தவர். சில நாட்களுக்கு முன் தான் கட்சியிலிருந்து விலகினார்.
காங்கிரஸ் தலைமையிலான ஜமு கூட்டணி ஆட்சிக் காலத்தில் கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இவர் பணியாற்றிய போது, கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கிராமப்புற பொருளாதாரத்தில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. இத்திட்டம் கொண்டு வந்ததில் இவருக்கு கணிசமான பங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நினைவுகள் அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு பொதுமக்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.