நடிகர் பிரகாஷ்ராஜ் இந்தி திணிப்புக்கு எதிராக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை மற்றும் இந்தி திணிப்புக்கு எதிராக மக்களும், திரையுலக பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பல நூதன போராட்டங்களை நடத்தி வந்தனர். அந்த வகையில், சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் டீசர்ட்டில் ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டீசர்ட் அணிந்து தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அந்தவகையில், கன்னட மக்களும், இந்தித் திணிப்பை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் பிரகாஷ்ராஜ் நான் பல மொழிகளில் பணியாற்ற முடியும். ஆனால் என் கற்றல், என் வேர்களைப் பற்றிய கருத்து என் வலிமை, என் பெருமை, என் தாய்மொழி என ஹிந்தி தெரியாது போடா என்று கன்னடத்தில் எழுதப்பட்டுள்ள டீசர்ட் அணிந்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.