Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க…… வியாபாரிகளுக்கு ரூ10,000….. அமைச்சர் அறிவிப்பு….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கான சிறப்பு திட்டம் ஒன்றை அமைச்சர் எஸ் பி வேலுமணி அறிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருவதால், பலர் தங்களது பழைய வாழ்வாதாரத்தை மீண்டும் மீட்டு எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க ரூபாய் 10 ஆயிரம் கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் திருப்பூரில் செப்டம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார். முகாமில் பங்கேற்க அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் எண், வங்கி கணக்கு எண், கைபேசி எண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |