வடகொரியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிபர் கிம் ஜாங் உன் எடுத்த முடிவு கொடூரத்தின் உச்சம் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் சீன எல்லையை பகிர்ந்துள்ள வடகொரியாவில் பாதிப்பு சற்று குறைவாகவே உள்ளது. அதற்கு காரணம், அந்நாட்டு அரசு கொரோனாவை சிறப்பாகக் கையாண்டதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது இதுகுறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, சீனாவிலிருந்து யாராவது எல்லை ஊடுருவி வந்தால் உடனடியாக சுட்டுத் தள்ளி விடுங்கள் என்று ராணுவத்திற்கு வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியது. வட கொரியாவும், சீனாவும் எல்லையை பல வருடங்களாக பகிர்ந்து வருகின்றனர். அப்படி இருக்கும் பட்சத்தில், சீனாவில் கண்டறியப்பட்டுள்ள கொரோனவைரஸ் வடகொரியாவில் ஒருவருக்கு மட்டுமே பரவியதாகவும், அவர் மூலம் மற்றவர்களுக்கு பரவி விடக் கூடாது என்பதற்காக அவரையும் சுட்டுத் தள்ளி விட்டார் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வர, இந்த செய்தி உண்மை என நம்ப முடியவில்லை. பொதுவாக தங்கள் நாட்டு விஷயங்களை ரகசியமாக கட்டிக் காப்பதில் வடகொரியா அதிபர் வல்லவர். அதன்படி, இந்த விஷயம் ஒருவேளை உண்மை எனும் பட்சத்தில், சக மனிதனின் உயிரை பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. இந்த செயல் கொடூரத்தின் உச்சமாக பார்க்கப்படும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.