19ஆம் தேதி தொடங்க இருக்கும் ஐ.பி.எல் போட்டி தொடருக்கான பயிற்சியில் வீரர்கள் தொடர்ந்து இருந்து வருகின்றனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் வருகின்ற 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த போட்டிகள் நடைபெற இருப்பதால் சமூக வலைதளங்களில் ஐபிஎல் குறித்த சுவாரசியங்கள் வைரலாகி வருகின்றன. அவ்வப்போது ஐபிஎல் அணி நிர்வாகத்தினர் தனது ட்விட்டர் பக்கத்தில் தங்களது வீரர்கள் அடிக்கும் இமாலய சிக்சர் களை பதிவிட்டு வருகின்றனர்.
அண்மையில் கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அடித்த ஒரு சிக்சர் காணாமல் போனது போன்ற வீடியோ வெளியாகி வைரல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டியது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் செயின் வாட்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். 39வயதாகிய இருவரும் உங்களை மகிழ்விப்போம் என்பதை உணர்த்தும் வகையில் அந்த பதிவு உள்ளது.
மகேந்திர சிங் தோனியும், வாட்சனும் பயிற்சியில் மாறி மாறி பந்துகளை விளாசி தள்ளுவது போன்ற ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சென்னை ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சின்ன தல ரெய்னா இல்லை என்றாலும் கவலை இல்லை நான் இருக்கின்றேன் என்பதை உணர்த்தும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
At the ripe old age of 39 …. just two old guys doing what we love @ChennaiIPL 😊😊💕💕 pic.twitter.com/GM8AQlDgS6
— Shane Watson (@ShaneRWatson33) September 13, 2020