கடகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு எதிர்பார்ப்புகளை சமாளித்து முன்னேற்றங்களை அடைவீர்கள்.
பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி இன்று ஒருவரையொருவர் அனுசரித்து நடந்துக்கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உடல்நிலையில் உஷ்ணம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவச் செலவைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களும் இன்று ஓரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.