சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமும் வலிமையும் கிடைக்கும்.
திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணவரவு சற்று ஏற்றம் இறக்கமாக இருந்தாலும், எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் குறையும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் எதிலும் திறம்பட ஈடுபட முடியாமல் போகும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.