விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு எதிலும் கவனமுடனிருப்பது நல்லது.
பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் நிவர்த்தியாகும். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பதும் விட்டுக்கொடுத்துச் செல்வதும் நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவிற்கு சாதகமான பலன்களை அடைவீர்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் ரீதியான போட்டி மற்றும் பொறாமைகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.