மகரம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும்.
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒருமுடிவுக்கு வரும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்படுவதோடு குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். ஆன்மீகம் மற்றும் தெய்வீக காரியங்களில் இன்று ஈடுபாடு அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.