நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கிய 12 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. பல்வேறு இடங்களில் கன மழை பெய்து கொண்டிருப்பதால் சில பகுதிகளில் நிலச்சரிவு தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கனமழை காரணமாக சிந்துபால்சவுக் மாவட்டத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் மலை அடிவாரத்தில் இருந்த 18 வீடுகள் நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்டன.
அந்த வீடுகளில் வசித்து வந்த 12க்கும் மேற்பட்டோரை காணவில்லை. நிலச்சரிவில் சிக்கியவர்களின் கதி என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை. அதனால் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.