Categories
உலக செய்திகள்

 பாராளுமன்ற கூட்டம்… இந்தியா-சீனா விவகாரம் குறித்து விவாதம்…!!!

நாளை தொடங்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை குறித்து விவாதம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பிரச்சனையில் சீன படைகள் அத்துமீறி செயல்பட்டு வருகின்றன. அதனால் எல்லையில் பதற்றம் நிலவி கொண்டிருக்கிறது. அந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்து தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கிறது. அந்தக் கூட்டத் தொடரில் விவாதம் செய்யப்படும் அம்சங்கள் மட்டும் பட்டியலிடப்படும் மசோதாக்களும் உள்ளிட்ட அவை நடவடிக்கைகள் குறித்து இன்று நடைபெற்ற அலுவலக ஆய்வுக்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. அச்சமயத்தில் எல்லையில் சீனா அத்துமீறும் பிரச்சனை தொடர்பாக கூட்டத்தொடரில் கட்டாயம் விவாதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதனால் சீனா அத்துமீறல், இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் ராணுவ நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் நாளை தொடங்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை முதல் வார விடுமுறை இல்லாமல் அக்டோபர் 1ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்ற கூட்டம் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், பிறகு மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும். அந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரம் மற்றும் தனிநபர் மசோதா வும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |