அமெரிக்கா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு ஆண்டு ஆகலாம் என மூத்த மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கொரோனாவின் பாதிப்பை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அங்கு தற்போது வரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை எட்டியுள்ளது. மேலும் 66.76 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் புதிதாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி விரைவில் கண்டறியப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அதனால் கொரோனா தடுப்பூசி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தால் பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க அரசின் மூத்த மருத்துவ நிபுணர் அந்தோனி பாசி கூறுகையில், ” கொரோனா பாதிப்பு இற்கு முன்னர் நான் இருந்து வந்த இயல்பு நிலை திரும்புவதை குறித்து நீங்கள் பேசுகிறீர்கள் என்றால் அது கட்டாயம் 2021 ஆம் ஆண்டுக்குள் இருக்கும். அல்லது 2021 ஆம் ஆண்டு இறுதியில் கூட இருக்கலாம். அரசு நிர்வாகம் என்னை அமைதியாக இருக்கும்படி கூறும் தகவலில் எந்த ஒரு உண்மையும் கிடையாது” என்று அவர் கூறியுள்ளார். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது