அபுதாபியில் ஆறு நாட்கள் தொடர்ந்து தங்கும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் அதை தவறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
துபாய், சார்ஜா உள்ளிட்ட அமீரகத்தின் பிற பகுதிகளில் வசிப்பவர்கள் அபுதாபி நகருக்குள் நுழைவதற்கு முன்னதாக பிசிஆர் அல்லது டிபிஐ எனப்படும் சோதனை செய்யப்படுகிறது. அதன்பிறகு கொரோனா பரிசோதனை முடிவுகளில் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் 48 மணி நேரத்திற்குள் அபுதாபி பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். அவ்வாறு கொரோனா இல்லை என உறுதிப் படுத்தப் பட்டவர்கள் அபுதாபி நகரில் தொடர்ந்து ஆறு நாட்கள் தங்கி இருந்தால் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதனை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதுமட்டுமன்றி பாதுகாப்பு விதிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆறாவது நாளில் பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்யாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் அபுதாபி பகுதியில் வசிக்கும் மக்கள் கிராமங்களுக்குச் சென்று திரும்பும் போது இந்த அவர்களுக்குப் பொருந்தாது. கொரோனா தடுப்பு பரிசோதனையில் ஈடுபட்டவர்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தாது. மேலும் அவர்கள் அபுதாபி பகுதிக்குள் நுழைவதற்கு அவசர சேவைப் வாகனங்கள் செல்லும் வழித்தடத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அபுதாபி அவசர சேவை மற்றும் பேரிடர் மேலாண்மை கமிட்டி கூறியுள்ளது.