Categories
உலக செய்திகள்

இத்தாலி கருப்பின வாலிபர்… அடித்துக் கொலை… மக்கள் ஆவேசம்…!!!

இத்தாலியில் கருப்பின வாலிபர் ஒருவர் வெள்ளையின இளைஞர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்ற வாலிபர் கடந்த மே மாதம் போலீஸ் அதிகாரி ஒருவரால் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு பிறகு அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலக நாடுகள் முழுவதிலும் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் எழுந்தன. அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலியில் கருப்பின வாலிபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இத்தாலியின் தலைநகர் ரோமின் புறநகர் பகுதியில் 21 வயதுடைய வில்லி மான்டீரோ துதர்தே என்ற கருப்பின வாலிபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவர் வெள்ளை இனத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலரால் அடித்து கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் இத்தாலியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு இத்தாலி பிரதமர் உள்ளிட்ட அரசின் உயர்மட்ட பிரதிநிதிகள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்நாட்டு மக்களிடையே இந்த சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதில் தொடர்புடைய நபர்களுக்கு கடுமையான தண்டனை கட்டாயம் வழங்க வேண்டும் என்று அவர்கள் அனைவரும் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அந்நாட்டு பிரதமர் மற்றும் அந்நாட்டின் உள்துறை மந்திரி ஆகியோரும் அந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அந்த கருப்பின வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |