Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் உச்சம் தொட்ட கொரோனா….11 லட்சத்தை எட்டிய பாதிப்பு…!!!

மராட்டியம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை  எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மராட்டியத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு இன்று மட்டும் 22,543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை10,60,308 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 416 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,531 ஆக அதிகரித்துள்ளது.

அதே சமயத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11,549 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,40,061 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 2,90,344 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத் துறை கூறியுள்ளது.

Categories

Tech |