Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவை கண்டு பயன்படுறாங்க… அதான் இப்படி செய்யுறாங்க… எல்.முருகன் சொன்ன அந்த தகவல் …!!

தமிழக பாஜகவை பிற கட்சிகள் உளவு பார்க்கின்றார்கள் என்ற பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவிர்த்துள்ளார்.

தமிழக சட்டசபைக்கு இன்னொரு ஏழு மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனால் அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகங்கள், பிரச்சாரங்கள், யுத்திகள், அரசியல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பாஜக கையைக் காட்டும் நபர்கள் தான் ஆட்சி அமைப்பார்கள். பாஜக தமிழக சட்டப்பேரவை அலங்கரிக்கும் என்றெல்லாம் பல்வேறு வகைகளில் கோணங்களில், கூட்டணியில் இருக்கும் அதிமுகவையே சீண்டும் அளவுக்கு கருத்து தெரிவித்து வந்தனர். பாஜகவின் துணை தலைவர் துரைசாமி தமிழகத்தில் பாஜகவுக்கும்,  திமுகவுக்கும் தான் போட்டி என்றெல்லாம் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான் பாஜக தலைவர் எல்.முருகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, பாஜகவில் தங்கள் கட்சியினர் இணைந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மற்ற கட்சிகள் உளவு பார்த்து வருகின்றனர். தமிழக சட்டமன்றத்தில் பாஜக எம்பிக்கள் அலங்கரிப்பது நிச்சயம் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |