ரஜினி தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என ராகவா லாரன்ஸ் கோரிக்கை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் முன்வைத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினி தான் காலம் வரும் போது கட்டாயம் அரசியலுக்கு வருவேன் என்றும், அரசியலுக்கு வந்த பிறகு கட்சி வேறு, ஆட்சி வேறு என வழி நடத்துவேன் எனவும், கட்சியை நான் தலைமையேற்று நடத்துவேன், ஆட்சியை வேறொருவர் தலைமையேற்று நடத்துவார்கள் முதல்வர் வேட்பாளராக நான் நிற்கமாட்டேன், அதற்கான ஆசையும் எனக்கு இல்லை என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு, முதல்வர் வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். அதில், நீங்கள் வேறு ஒரு நபரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பேன் என்று எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதை அனைத்து ரசிகர்களும் தலைவரிடம் வலியுறுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.