தமிழக்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிக்க பெற்றோர்களின் எதிர்ப்பார்ப்பே கரணம் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரியவித்துள்ளார்.
நாடு முழுவதும் நேற்று மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு நீட் நடைபெற்றது. தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வால் அச்சத்தில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேசுபொருள் ஆகியது, அது மட்டுமல்லாமல் அனைவரின் நெஞ்சை உலுக்கும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவர் தற்கொலை குறித்து முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் மாணவர்கள் தற்கொலை செய்வதை நிறுத்த வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தினர் . இது குறித்த கேள்விக்கு வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசும்போது, தமிழகத்தில் மாணவர் தற்கொலை அதிகரிக்க பெற்றோர்களின் எதிர்பார்ப்பு காரணம் என்று தெரிவித்துள்ளார்.