Categories
மாநில செய்திகள்

அறிக்கையா வெளியிடுறீங்க…. நடிகர் சூர்யா மீது நடவடிக்கை… அதிரடி காட்டிய நீதிபதி …!!

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நேற்று நாடு முழுவதும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான நீட் நடைபெற்றது. இந்தத் தேர்வின் அச்சத்தையடுத்து, அடுத்தடுத்து 3 தமிழக தமிழக மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது, மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்களின் மரணத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்ததோடு, நீட் தேர்வை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இதேபோல் நடிகர் சூர்யாவும் அறிக்கை வெளியிட்டார். அதில் உயிருக்கு பயப்படும் நீதிமன்றம் மாணவர்களை தேர்வு எழுத சொல்வதாக நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார்.  உயிருக்கு பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத சொல்வதாக சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மை, சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.

சூர்யாவின் கருத்து மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல்,தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளது. “நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும்” -நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Categories

Tech |