ராகுல் காந்தி பிரதமரானதும் நீட் தேர்வு இரத்து செய்யப்படும் என்று புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். தேர்வுக்கு முன்னர் அதாவது…. நேற்று முன்தினம் நீட் தேர்வு பயத்தினால் அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் நீட் தேர்வுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து, நீட் தேர்வை வலுக்கட்டாயமாக எழுதச் சொல்லும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து, தேர்வு எழுத செல்லும் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்றெல்லாம் அறிவுரைகளை வழங்கி இருந்தனர்.
இந்த நிலையில் புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி பிரதமராக ராகுல் காந்தி தலைமையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தான் நீட்டை கொண்டு வந்தார்கள் என்று அரசியல் விமர்சனம் இருப்பது குறிப்பிடத்தக்கது.