Categories
அரசியல் மாநில செய்திகள் ராமநாதபுரம்

திராவிட ”பெரியார்”க்கு மாற்று ”ஆன்மிக பெரியார்” வெறியான ரஜினி பேன்ஸ் ….!!

ராமநாதபுர மாவட்ட ரஜினி ரசிகர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டி ( ஆன்மிக பெரியார் ஆட்சி )  வைரலாகி வருகின்றது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் 7 மாதத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கின்றன. கூட்டணி பேச்சுக்களும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தமிழக தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது நடிகர் ரஜினிகாந்த். அவர் ஏற்கனவே 2021 தேர்தலில் நிச்சயமாக களம் காண்போம் என்று தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் ரசிகர்களை சந்தித்த போது ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் நிச்சயம் நடைபெறும். இப்ப இல்லனா எப்போ இல்லை என்றெல்லாம் பேசி ரசிகர்களை உற்சாக படுத்தி இருந்தார். இந்த நிலையைத்தான் தேர்தலுக்கும் ஏழு மாதங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்காக ஆங்காங்கே ரசிகர்கள் சுவரொட்டி மூலம் அரசியல் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது ராமநாதபுரத்தில் ரஜினி ரசிகர்கள் கடவுள் நிந்தனை ஒழியட்டும்… ஆன்மீக ஆட்சி மலரட்டும்…. ஆன்மீக பெரியார் ஆட்சி…  இப்ப இல்லனா, இனி எப்போதும் இல்லை என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

Categories

Tech |