நாடாளுமன்ற சட்ட சபை கூட்டம் இன்று கொரோனா வழிமுறைகளை பின்பற்றி நடைபெற இருக்கிறது.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் 10 வருடங்கள் கழித்து வேறொரு இடத்தில் நடத்தப்பட இருக்கிறது. அதாவது இந்த கலைவாணர் அரங்கில் 1952 க்கு பிறகு 2ஆம் முறையாக நாடாளுமன்ற சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. மேலும் 1000 பேர் அமரக்கூடிய கலைவாணர் அரங்கின் இரண்டாவது தளத்தில் இடைவெளிவிட்டு இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தற்காலிக அனுமதி அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த சட்டமன்ற கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியதும், பிரணாப் முகர்ஜி, ஜெ.அன்பழகன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன்பின் நாளை துணை நிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தில் கேள்வி நேரம் என்பது இடம்பெற உள்ளது. இந்த கேள்வி நேரத்தில்,கொரோனா விவகாரம், புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, கிசான் திட்டத்தில் முறைகேடு போன்ற பல பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பி, கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
அதுமட்டுமில்லாமல் இந்த கூட்டம் நடைபெறும் இடங்களை சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டு முழுநேரமும் ரோந்தில் இருக்குமாறு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும் சுற்றி வரை சிசிடி கேமரா கொண்டு கண்காணிக்கப்பட இருக்கிறது. இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நுழைவதற்கு முன்னதாக அமைச்சர்கள் மற்றும் தலைவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கிருமி நாசினி தெளித்தல், சமூக இடைவெளி, போன்றவை இந்த கூட்டத்தில் பின்பற்றப்பட இருக்கிறது.