Categories
செய்திகள்

நான் சீக்கரம் ரீ-என்ட்ரி கொடுப்பேன் – வடிவேலு..!!

பிரபல நகைச்சுவை நடிகர் திரு  வடிவேலு தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் மீண்டும் அனைவரையும் மகிழ்விக்க வருவேன் என குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் 12 அவருடைய பிறந்த நாள். நான் தினமும் மக்களை சிரிக்க வைக்கிறேன், அதனால் தினமும் பிறந்து கொண்டேதான் இருக்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திலும் நகைச்சுவை செல்வமாய் பிறப்பு எடுக்கிறேன்.

என்னைப் பெற்ற தாய் தந்தையருக்கு நன்றி. மக்கள் சக்தி இல்லையெனில் இந்த வடிவேலு இல்லை. என் தாய்க்கு பின் மக்கள்தான். விரைவில் அருமையான என்ட்ரி உடன் திரையுலகத்திற்கு வருவேன் என்று வீடியோ டுவிட்டரில் பதிவிட்டார்.

Categories

Tech |