திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் நீட்தேர்வு என்பதை போராடியாவது நீக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நீட் தேர்வு என்பது தற்கொலையை தூண்டும் தேர்வாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பல்வேறு கட்சி அமைப்பினர் மற்றும் தலைவர்கள் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்தும் அவர்கள் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் நேற்று இந்த நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக 3 மாணவர்கள் தற்கொலை செய்து கண்ட சம்பவத்திற்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் பிரபல நடிகர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திமுக கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு குறித்து தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டப் போராட்டத்தை சந்தித்தாவது நீட் தேர்வை கட்டாயம் நீக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மோதிலால் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை அவர் வழங்கினார்.